யோகாசனம் - தனுராசனம்
யோகாசனம்
தனுராசனம்
செய்முறை
விரிப்பில் குப்புற படுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இரு கைகளையும் உடலோடு ஒட்டி வைத்துக் கொள்ளவும்.
இரு கால்களையும் முழங்கால்களை மடக்கி ஒன்று மாற்றி ஒன்றாக தூக்கி கொண்டுசில முறை பயிற்சி செய்துவிட்டு பின்னர் இரு கால்களையும் முழங்காலை மடக்கிதூக்கிய வண்ணமே இரு கைகளாலும் பிடிக்க வேண்டும்.
அப்படியே கால்களை தலைக்க நேராக கொண்டு வந்த வண்ணமே தலையையும் நெஞ்சு பகுதியையும் மேல்நோக்கி தூக்கிக் கொள்ள வேண்டும்.
இரு பாதங்களும் மேலே சேர்ந்த வண்ணம் இருக்க வேண்டும். முழங்கால்கள் ஒட்டி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வயிற்றுப்பகுதி தரையில் அழுத்தி இருக்க உடல் வில் போல் வளைய வேண்டும். சுவாவம் இயல்பாக இருப்பது நலம்.
பலன்கள்:
இதைத் தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை குறைவதோடு இடுப்பு தொடைகளின் சதைகளும் கரையும். உடல் பின்னோக்கி வளைக்கப்படுவதால் ரத்த ஓட்டம் சீராகும். ரத்த குழாய்கள் நன்கு செயல்படும். அதிகப்படியான பிராணவாயு கிடைக்கும். வயிற்று தொல்லைகள், வாயு தொல்லைகள் குறையும். இதயம் நன்கு சுருங்கி விரிந்து சுறுசுறுப்பாக இயங்கும். நுரையீரல் நன்கு செயல்படுவதால் ஆஸ்துமா நோயாளிகளுக்குப் பலன் அளிக்கும். இந்த ஆசனமும் நீரிழிவு நோயாளிகளுக்கு பயன் தர வல்லது. சாப்பிட்டதும் இந்த ஆசனம் செய்யக்கூடாது. மேலும் ஆபரேஷன் செய்து கொண்டவர்களும் இந்த ஆசனம் செய்யக்கூடாது.
குறிச்சொற்கள்: