கேன்சரைப் போக்கும் காட்டு அத்தா பழம் (Graviola Tree)
உயிர்க்கொல்லி நோய் கேன்சரைப் போக்கும்
நோய்களில் உயிர்க்கொல்லி நோய் என அஞ்சப்படும் கேன்சரைப் போக்கும் இந்த கடு அத்தா பழம். இது ஸ்ரீலங்காவில் அதிகமாக கிடைக்கிறது. கேன்சர் நோயானது பெரும்பாலான உடல் உறுப்புகளை தாக்கவல்லது. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தபட்டாலும், அதை மனிதநேயத்துடன் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.
நோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதே சமயம் இயற்கையான உணவுப் பொருட்களிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் கொடுத்துள்ளான்.
அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்த புற்றுநோய் கொல்லியாக இந்த கடு அத்தாப்பழம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம் கேன்சருக்கு கொடுக்கப்படும் இராசாயன வகை கீமோ மருந்துகளைவிட பத்தாயிரம் மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புத படைப்பு என்று இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக, உள்ளதாக ஆராய்ச்சி முடிவு கூறுகின்றன.
சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக விளைகிறது. இலங்கையிலும் மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்ச்சுகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது.
மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், சர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தைப் பயன்படுத்துகிறார்கள். மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும் ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான பழமாக பயன்படுத்தப்படுகிறது. ஏன், நம் நாட்டில் கேரளாவிலும் சக்கா என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவது இல்லை.
இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறம் பலாப்பழத்தைப் போன்று இருக்கும். ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண பழத்தின் அளவுகளிலும், அதிகபட்சம் 10 முதல் 30 செ.மீ வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது. அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் சி, வைட்டமின பி1, வைட்டமின் பி2 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
குறிச்சொற்கள்: