அன்னாசி பழத்தை வைச்சு இப்படி ஒரு சாதம் செஞ்சு பாருங்க வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க
அன்னாசி பழத்தை வைச்சு இப்படி ஒரு சாதம் செஞ்சு பாருங்க வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க
தினமும் என்ன சமைக்கலாம் என்பதுதான் பெரும்பாலான இல்லத்தரிசிகளுக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகும். குழம்பு, பொரியல் என்று செய்வது எப்போதும் கடினமாக இருக்கும். அந்த சூழலில் கலவை சாதம் செய்வதுதான் அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும். கலவை சாதம் என்று வரும்போது பொதுவாக தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவைதான் அனைவருக்கும் நினைவிற்கு வரும்.
பொதுவாக பழங்களை சாப்பிடத்தான் விரும்புவார்கள், ஆனால் அதை வைத்தும் சுவையான கலவை சாதம் செய்யலாம். அன்னாசி பழம் பொதுவாக அனைவருக்கும் பிடித்த பழமாக இருக்கும். ஆனால் அதை வைத்தே சுவையான கலவை சாதம் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான், அன்னாசி பழத்தை வைத்து சுவையான அன்னாசி பழ சாதம் செய்யலாம். அது எப்படியென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள் :
- சமைத்த சாதம் - 1 கப்
- அன்னாசிப்பழம் -1 கப்
- வெங்காயம் - 1
- இஞ்சி - சிறு துண்டு
- பூண்டு - 4 பல்
- கொத்தமல்லி தழை- ஒரு கைப்பிடி அளவு
- புதினா - ஒரு கைப்பிடி
- மிளகாய்த்தூள் - அரை டேபிள் ஸ்பூன்
- மிளகு - 1 டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை :
- முதலில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- அதில் அன்னாசிப்பழத் துண்டுகளைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.
- அத்துடன் துருவிய இஞ்சி, பூண்டு பற்களைச் சேர்த்து சில வினாடிகள் வதக்கியபின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின்னர் கொத்தமல்லி, புதினா இலைகளைச் சேர்த்து சற்று வதக்கி, அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.
- அதில் 2 அல்லது 3 ஸ்பூன் நீரைத் தெளித்து மூடி வைத்து மிதமான தீயில் சில வினாடிகள் வதக்கவும்.
- பின்னர் மூடியைத் திறந்து, நீர் வற்றும் வரை கிளறி விடவும்.
- பின்னர் சாதத்தை அதில் போட்டு மிளகுத்தூள் தூவி தீயை அதிகமாக்கி, நன்றாக கிளறி இறக்கி வைக்கவும்.
- இறக்கி வைத்தப் பின் எலுமிச்சை சாறைச் சேர்த்து கிளறி, கொத்துமல்லி இலைத் தூவி பரிமாறினால் சுவையான அன்னாசி சாதம் ரெடி. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும்.
குறிச்சொற்கள்: