கோவையில் இருந்து திருப்பதி போறீங்களா ரயிலில் போறவங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்க போகிறது
கோவையில் இருந்து திருப்பதி போறீங்களா ரயிலில் போறவங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்க போகிறது
கோவையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அதிநவீன வசதிகளுடன் கூடிய எல்.எச்.பி. பெட்டிகள் கொண்டதாக மாற்றம் செய்யப்பட்டு இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த பெட்டிகளில் உயர்ரக குளிர்சாதன வசதிகள், ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்துடன் நீண்ட தூரம் பயணித்தாலும் சலிப்பு தட்டாமல் இருக்கைகள் பராமரிப்பு மற்றும் டிஸ்க் பிரேக் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வேயின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
உலக புகழ் பெற்ற ஏழுமலையான் திருக்கோவிலுக்கு பக்தர்கள் பலர் தினமும் சென்று வருகிறார்கள்.. குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் திருப்பதிக்கு சென்று வருகிறார்கள். கோவையில் இருந்தும், சென்னையில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் திருப்பதி செல்ல ரயில்கள் உள்ளன. தென்மாவட்டங்களில் இருந்தும் திருப்பதிக்கு வாரத்தில் சில நாட்கள் ரயில்கள் உள்ளது. இல்லை என்றால் காட்பாடி சென்றோ அல்லது சென்னை வந்தோ மாறி செல்ல முடியும்.
கோவையை பொறுத்தவரை திருப்பதிக்கு வாரத்தில் நான்கு நாட்கள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அதிநவீன வசதிகளுடன் கூடிய எல்.எச்.பி. பெட்டிகள் கொண்டதாக மாற்றம் செய்யப்பட்டு இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவையில் இருந்து ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக திருப்பதிக்கு வாரத்தில் 4 நாட்கள் செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இதே போல திருப்பதியில் இருந்து கோவைக்கு மறுமார்க்கத்தில், திங்கள், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதால் இதன் சேவையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
இதன் அடிப்படையில் கோவையில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலின் அனைத்து பெட்டிகளும் அதிநவீன வசதிகள் கொண்ட எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பெட்டிகளில் உயர்ரக குளிர்சாதன வசதிகள், ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்துடன் நீண்ட தூரம் பயணித்தாலும் சலிப்பு தட்டாமல் இருக்கைகள் பராமரிப்பு மற்றும் டிஸ்க் பிரேக் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த ரயில் சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இன்று முதல் எல்.எச்.பி. கொண்ட பெட்டிகளில் பயணிகள் பயணம் செய்யலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
குறிச்சொற்கள்: