திருவண்ணாமலையில் "பெரிய தேர்" வெள்ளோட்டம் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் ரதத்தை காண குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலையில் "பெரிய தேர்" வெள்ளோட்டம் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் ரதத்தை காண குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலையில் ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரிய தோ் என்று அழைக்கப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தேரின் வெள்ளோட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்று வருகிறது. தேர் வெள்ளோட்டத்தையொட்டி, ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள முதன்மையான முக்தி தலங்களில் ஒன்றாகவும், ஆன்மீக பூமியாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும்.. இது சித்தர்கள் பூமி என்றும், சிவனே மலையாக அமர்ந்திருப்பதால் கைலாயத்திற்கு இணையான தலம் என்றும் பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும்... அந்தவகையில், இந்த வருடத்துக்கான கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 1-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
தீபத்திருவிழா: இந்த விழாவில் 4-ந்தேதியன்று கொடியேற்றமும், 10-ந்தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும், 13-ந்தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் துரிதமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.
இதையொட்டி, கோயிலின் பெரிய தோ் என்று அழைக்கப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தேரை புதுப்பிக்க கோயில் நிா்வாகம் முடிவு செய்தது. அதன்படி, தமிழக இந்து சமய அறநிலையத் துறை மற்றும் உபயதாரா்கள், பக்தா்கள் சோ்ந்து தேரை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனா். ரூ.70 லட்சம் செலவில் 59 அடி உயரம் கொண்ட ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தோ் புதுப்பிக்கப்பட்டது.
அண்ணாமலையார்: தீபத்திருவிழாவில், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி வலம் வரும் இந்த மகா ரதத்தின் உயரம் 59 அடியும், 200 டன் எடையும் கொண்டதாகும்.. தேர் சக்கரத்தின் விட்டம் மட்டுமே 9 அடி என்கிறார்கள்.. மகா ரதத்தில் பழுதடைந்திருந்த தேவாசனம், நராசனம், சிம்மாசனம், அலங்கார தூண்கள் அனைத்துமே மாற்றப்பட்டு, 4 கொடுங்கை நிலைகளும், பிரம்மா மற்றும் துவாரகபாலகர்கள் சிலைகளும் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன..
இவைகளுடன் சம்மயாழி 37, கொடியாழி 13, தேர் சிற்பங்கள் 153 உள்பட மொத்தம் 203 சிற்பங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர் புதுப்பொலிவுடன் மின்னுகிறது. இதன் வெள்ளோட்டம் இன்று காலை 7 மணியிலிருந்து துவங்கி நடந்து கொண்டிருக்கிறது.
பொலிவு பெற்ற சிற்பங்கள்: தேரில் தேவாசனம், நராசனம், சிம்மாசனம் போன்ற அலங்காரத் தூண்களில் உள்ள பழுதடைந்த சிற்பங்கள் புதிதாக மாற்றப்பட்டன. 4 கொடுங்கை நிலைகள், பிரம்மா, துவாரபாலகா் சிலைகள் புதுப்பிக்கப்பட்டன. இதுதவிர, 203 சிற்பங்கள் புதிதாக செய்யப்பட்டு பொருத்தப்பட்டன.
ஒரு மாதமாக நடைபெற்று வந்த தோ் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை (நவ.8) வெள்ளோட்டம் நடைபெறவுள்ளது.
இன்று வெள்ளோட்டம்: காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தோ் வெள்ளோட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.. கோயில் ராஜகோபுரம் எதிரிலிருந்து புறப்படும் தோ், தேரடி வீதி, கடலைக் கடை சந்திப்பு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு, காந்தி சிலை வழியாக மறுபடியும் வந்தடைகிறது. தேர் வெள்ளோட்டத்தையொட்டி, ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர் வெள்ளோட்டத்தின்போது அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் மின் தடை செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.. இந்த பெரிய தேர் வெள்ளோட்டத்தில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.. இன்று தேர் வெள்ளோட்டம் என்பதால், தமிழக நெடுஞ்சாலைத் துறை சாா்பில், தேரோடும் வீதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்துமே கடந்த 2 நாட்களாகவே அகற்றப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
குறிச்சொற்கள்: