தகவல் களஞ்சியம்
தகவல் களஞ்சியம்
- திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு வருமானம் 530 கோடி ரூபாய்கள், இதுவே இந்தியாவில் அதிக வருமானம் கொண்ட டிரஸ்ட் ஆகும்.
- மெக்டொனால்ட் நிறுவனம், மாதத்திற்கு சராசரியாக 1,10,000 ஐஸ்கிரீம் கோன்களை விற்பனை செய்கிறது. இரண்டு நாளைக்கு ஒரு முறை மீன் இறைச்சியை சாப்பிட்டால் மாரடைப்பு வருவது 30% குறையும் என ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- மனிதனது மூளையில் ஏராளமான நுண்மடிப்புகள் உள்ளன. கட்டளை அல்லது செய்திகளைக் கிரகிக்கும் பகுதி மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. சிலரது மூளை அதிக மடிப்புகளைக் கொண்டிருக்கும். இவை மிகவும் அபாரமானவை. கம்ப்யூட்டர்களைப் போல பணிபுரிவதுடன், அற்புதமான கிரகிக்கும் ஆற்றலையும், நினைவாற்றலையும் கொண்டது. சிலர் இளமையிலேயே அதிபுத்திசாலிகளாக விளங்குவது இதனால் தான். சீரான ஒரு மூளையில் பல ஆயிரம் நுண்மடிப்புகள் உள்ளன என்கிறார்கள் நரம்பியல் அறிஞர்கள்.
- தேள் முட்டையிடுவதில்லை. குஞ்சு பொரிக்கிறது. குஞ்சுகள் தாங்களாகவே நடமாடும் பருவமடையும் வரை, தாய்த்தேள் தன் மார்பிலேயே அவைகளை வைத்துக் கொண்டிருக்கும்.
- சிங்கத்தின் வாலிலே இருக்கும் மயிர்க் கற்றையை விலக்கிப் பார்த்தால், முனையில் ஆணி போல் கடினமான ஒரு நகம் இருக்கும்.
- சுண்டெலிகள் பாடுகின்றன! மிகவும் உச்சஸ்தாயில் பாடுவதாலேயே நாம் அதைக் கேட்க முடிவதில்லை. சில சமயங்களில் பாட்டின் ஒரு பகுதி கீழ்ஸ்தாதிக்கு இறங்கும் போது கேட்க முடிகிறது. ஆராய்ச்சியில் கண்ட உண்மை இது.
- ஆமைக்கு பல் கிடையாது. கனத்த ஈறு போன்ற அமைப்பாலேயே அது உணவுகளைச் சுவைத்து விழுங்குகிறது.
- நமது நகம் சராசரியாக நாளொன்றுக்கு 1/250 அங்குலம் வளர்கிறது.
- அமெரிக்காவில் வெஸ்ட் ரஞ்சு நகரில் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு நினைவுக் கூடம் ஒன்று இருக்கிறது அங்கே விஞ்ஞானக் குறிப்புகள் எழுதிய 25,000 நோட்டுப் புத்தகங்களை வைத்திருக்கிறார்கள்.
குறிச்சொற்கள்:
இந்த இடுகையை பற்றிய தங்கள் கருத்து
{{feedMsg}}
மேலும் சில கட்டுரைகளைப் படிக்கவும்