1996 ஆசிரியர் பணியிடங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
1996 ஆசிரியர் பணியிடங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் 1996 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாடவாரியாக காலிப்பணியிடங்களை www.trb.tn.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதோடு 10.07.2025 (இன்று) முதல் 12.08.2025 ம் தேதி வரை ஆசிரியர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதெடார்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1, ஆகிய பணியிடங்களுக்கான அறிக்கை (எண் 02/2025) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் www.trb.tn.gov.in வாயிலாக இன்று(10.07.2025) வெளியிடப்படுகிறது. பாடவாரியான காலிப்பணியிட விவரங்கள்
தமிழ் - 216
ஆங்கிலம் - 197
கணிதம் - 232
இயற்பியல் - 233
வேதியியல் - 217
தாவரவியல் - 147
விலங்கியல் - 131
வணிகவியல் 198
பொருளியல் - 169
வரலாறு - 68
புவியியல் - 15
அரசியல் அறிவியல் - 14
கணினி பயிற்றுநர் நிலை I - 57
உடற்கல்வி இயக்குநர் நிலை I -102 என்று மொத்தம் 1996 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வி தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வற்கான அனைத்து விவரங்களும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க ஏதுவாக 10.07.2025 முதல் 12.08.2025 பிற்பகல் 5 மணி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலான விண்ணப்பிக்கும் போது உரிய விவரங்களை சரிபார்த்து அதன்பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும். இதர வழியில் அனுப்பும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
குறிச்சொற்கள்: