அன்னாசி சாகுபடி முறை மற்றும் பயன்கள்
அன்னாசி சாகுபடி முறை மற்றும் பயன்கள்
எல்லாரும் விரும்பி உண்ணக்கூடிய பழங்களில் ஒன்றுதான் அன்னாசிப்பழம். சரி இந்த அன்னாசிப்பழம் சாகுபடி முறை மற்றும் அன்னாசிப்பழம் பயன்களை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறிவோம்.
அன்னாசி சாகுபடி – பருவகாலம்:-
அன்னாசி சாகுபடி பொறுத்தவரை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நடவுக்கு ஏற்ற பருவம் ஆகும்.
நிலம் மற்றும் நிலத்தின் கார அமிலத்தன்மை:-
அன்னாசிப்பழம் பொதுவாக நல்ல வடிகால் வசதியுள்ள களிமண் பகுதியில் நன்கு வளரும் தன்மை கொண்டது. மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 7.0 க்குள் இருக்க வேண்டும்.
அன்னாசி சாகுபடி முறை:
அன்னாசி சாகுபடி முறை (pineapple cultivation) பொறுத்தவரை சாகுபடிக்கு தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் சமன் படுத்திக்கொள்ள வேண்டும். நாற்றுகளை இரட்டை வரிசை முறையில் நடவு செய்வதற்கு ஏற்றவாறு பார்களை அமைக்க வேண்டும்.
கொண்டைகள், மேல் கன்றுகள், பக்க கன்றுகள் ஆகியவை நடவு செய்வதற்கு பயன்படுகிறது. 300 முதல் 350 கிராம் எடையுள்ள கன்றுகள் தேர்வு செய்து நட வேண்டும்.
நடவு செய்வதற்கு முன்பு கன்றுகளை மேன்கோசெப் 3% அல்லது கார்பன்டாசியம் ஒரு சதவீத கலவையில் 5 நிமிடங்கள் நனைத்து நடவு செய்ய வேண்டும்.
கன்றுகளுக்கு இடையில் உள்ள இடைவெளி 30 செ.மீ ஆகவும், வரிசைகளுக்கு இடையிலுள்ள இடைவெளி 60 செ.மீ ஆகவும் இருக்குமாறு விதை நேர்த்தி செய்த கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
அன்னாசி உயிர் நீர்:-
அன்னாசிப்பழம் சாகுபடி (pineapple cultivation) பொறுத்தவரை மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும். நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அன்னாசி சாகுபடி உரம்:-
அன்னாசி சாகுபடி முறை (pineapple cultivation) பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு தொழு உரம் 40 முதல் 50 டன் இட வேண்டும். பின்பு செடி ஒன்றுக்கு 16 கிராம், சூப்பர் பாஸ்பேட் 4 கிராம் கலந்து கன்று நட்ட ஆறாவது மாதமும் பின்பு பன்னிரெண்டாவது மாதமும் இட வேண்டும்.
பின்பு மூன்று மாதத்திற்கு ஒருமுறை தொழுஉரம் மற்றும் மண்புழு உரம் வைத்து நீர் பாய்ச்சினால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.
பழத்தின் எடை அதிகரிக்க நாப்தலின் அசிட்டிக் அமில கரைசலை காய் பிடித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் தெளிக்கவேண்டும். இதனால் பழங்கள் பெரியதாகி எடை அதிகரிக்கும்.
அன்னாசி களை நிர்வாகம்:-
அன்னாசி சாகுபடி முறை (pineapple cultivation) பொறுத்தவரை களைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு முறை உரமிடும் பொழுதும், அறுவடை முடிந்த பின்பும் செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும். பழத்தின் பருமனை அதிகரிக்க காய்பிடித்து ஒன்றிரண்டு மாதங்களில் கொண்டையின் குருத்தை கிள்ளி எடுத்துவிட வேண்டும்.
இதனால் 12 – 20 சதவீதம் வரை பழங்கள் பெரியதாகும். கன்று நட்ட 12 மாதங்களில் பூ வர ஆரம்பித்து 18 மாதங்களில் பழங்கள் அறுவடைக்கு தயாராகும்.
அன்னாசி சாகுபடி அறுவடை:
இந்த அன்னாசி சாகுபடி முறை பொறுத்தவரை பழங்கள் மஞ்சள் நிறமாக மாறியபின் அறுவடை செய்யவேண்டும். ஒரு ஏக்கருக்கு 50 டன் வரை பழங்கள் கிடைக்கும்.
அன்னாசி பழம் பயன்கள்
- அண்ணச்சிப்பழத்தில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் உள்ளன. விட்டமின் A,B,C சத்துகள் நிறைந்துள்ளன.
- அன்னாச்சி இலைசாறு வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது.
- அன்னாச்சிப்பழச் சாறுடன் தேன் சேர்த்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபகசத்தி குறைவு போன்ற நோய்கள் குணமடையும்.
- அன்னாச்சிப்பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும்.
- மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாச்சிப் பழச்சாற்றை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- நோய் எதிர்ப்பு சத்தி அதிகம் உள்ள அன்னாச்சிப் பழத்தை சாப்பிட்டால் பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.
குறிச்சொற்கள்: