பனங்கிழங்கு சாகுபடி
பனங்கிழங்கு சாகுபடி
பனங்கிழங்கு சாகுபடி பொறுத்தவரை பனங்கொட்டைகளை தனியாக பிரித்து ஒரு வாரம் நிழலில் காய விட வேண்டும்.
பின்பு பனங்கிழங்கு சாகுபடி செய்யும் நிலத்தில் 6 அடி நீளம், 3 அடி அகலத்தில் பாத்திகள்பிரித்து அதில் கொட்டையின் மேல்புறம் வானத்தை பார்த்து இருக்குமாறு நெருக்கமாக கொட்டைகளை விதைக்க வேண்டும். குழிகளில் செம்மண்ணையும், மணலையும் கலந்து போட வேண்டும். இதனுடன் எரு கலந்து இடுவதால் கிழங்கு பெரியதாக கிடைக்கும்.
நீர்ப்பாசனம்:
பனங்கிழங்கு சாகுபடி பொறுத்தவரை விதைத்ததும் ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும். பிறகு வாரம் ஒருமுறை தண்ணீர் தெளித்தால் போதுமானது.
பாதுகாப்பு முறை:
பனங்கிழங்கி சாகுபடி பொறுத்தவரை கோழிகளிடமிருந்து பாதுகாக்க சுற்றிலும் முள் போட வேண்டும். விதைத்த 70 நாட்களில் கிழங்கு வளர்ந்து விடும்.
பின்பு கிழங்கைப் பிடுங்கி கொட்டையைத் தனியாகவும், காம்பைத் தனியாகவும் வெட்ட வேண்டும். அதன் பின் கிழங்கை விற்பனை செய்யலாம்.
பனங்கிழங்கு பயன்கள்:
- பனங்கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. பனங்கிழங்கி சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும். உடல் சோர்வு குறையும்.
- பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.
- பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது.எனவே இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம்.
- பனங்கிழங்கில் நார்சத்தும் அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- வயிறு, மற்றும், சிறுநீர் பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
- பனங்கிழங்கில் பித்தம் கொஞ்சம் அதிகரிக்கும். எனவே இதைச்சாப்பிட்டப் பின் மிளகு ஐந்து எடுத்து வாயில் போட்டு மென்றுவிட வேண்டும்.
குறிச்சொற்கள்: