பச்சை மிளகாய் தொக்கு ரெசிபி பச்சை மிளகாயை வைச்சு இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் இந்த தொக்கு செய்யுங்க
பச்சை மிளகாய் தொக்கு ரெசிபி பச்சை மிளகாயை வைச்சு இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் இந்த தொக்கு செய்யுங்க
பச்சை மிளகாய் என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது காரம் தான். ஆனால் இதில் அளவற்ற ஆரோக்கிய நன்மைகளும் இருக்கின்றன. இதில் இருக்கும் பீட்டோ-கரோட்டின் இதயத்தை வலுப்படுத்துவதோடு, கெட்ட கொழுப்பை குறைத்து ஹார்ட் அட்டாக்கில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் சி, இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இவ்வளவு நன்மைகள் கொண்ட பச்சை மிளகாயை நாம் உறுகாய், குழம்பு, மற்றும் பொரியல் என அனைத்திலும் சேர்த்திருப்போம். ஆனால், பச்சை மிளகாய் குழம்பு பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், பொள்ளாச்சியில் பிரபலமாக இருக்கும் இந்த பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- பச்சை மிளகாய் - 15 -
- சின்ன வெங்காயம் - 10-12
- இஞ்சி - 2 இன்ச் அளவு
- புளி - எலுமிச்சை அளவு
- மஞ்சள் - ½ டீ ஸ்பூன்
- பெருங்காயம் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- வெந்தயம் - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
- வெல்லம் - சிறிதளவு
செய்முறை:
- பச்சை மிளகாயை நன்றாக கழுவி காம்புகளை நீக்கி நன்றாக உலர விடவும்.
- பின் மிளகாய்களை நீளவாக்கில் நடுவில் மட்டும் கிரீ தனியாக வைத்துக் கொள்ளவும்.
- சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். - இஞ்சி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து கரைத்து எடுத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம் மற்றும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- பின் எண்ணெய்யில் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வறுக்கவும்.
- பின் அதனுடன் கீரி வைத்த பச்சை மிளகாயை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
- அதில் நறுக்கி வைத்த இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் கருவேப்பிலை சேர்த்து சத்தம் அடங்கும் வரை விடவும்.
- பின் அதில் பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- நறுக்கி வைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக கிளறவும்.
- பின் கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து கலந்து விடவும்.
- தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- கடைசியாக சிறிதளவு வெல்லம் சேர்த்து கிளறவும். வெல்லம் இல்லை என்றால் நாட்டு சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.
- கொஞ்சம் கெட்டிப்பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இப்போது கார சாரமான பச்சை மிளகாய் குழம்பு ரெடி!
குறிச்சொற்கள்: