கூண்டு முறையில் நாட்டு கோழிகளை வளர்ப்பதற்கான முறைகள்
கூண்டு முறையில் நாட்டு கோழிகளை வளர்ப்பதற்கான முறைகள்
கூண்டு முறையில் நாட்டு கோழிகளை வளர்க்க 6 அடி நீளம் 4 அடி அகலம் 2 முதல் 3 அடி உயரம் கொண்ட அரை அங்குல கம்பிகளால் ஆன கூண்டு தயாரிக்க வேண்டும். இரும்பு சட்டத்தில் தரையிலிருந்து 3 அடி உயரத்தில் பொருத்தினால் கூண்டில் அவை எச்சமிடும் போது கீழே உள்ள தட்டில் சேகரித்து அகற்றலாம். நீள, அகலத்தின் நடுவில் 2 அடியில் கம்பி வலையால் தடுப்பு அமைத்தால் நான்கு அறைகளாக் பிரிக்கலாம்.
ஒவ்வொரு அறைக்கும் மத்தியில் தாழ்ப்பாளுடன் சிறிய கதவு பொருத்த வேண்டும். மேற்கூரையை இரும்பால் செய்து கூரையின் விளிம்பு பக்கவாட்டில் இருபுறமும் முக்கால் அடி நீட்டுமாறு இருக்க வேண்டும். இந்த கூண்டை வராண்டாவிலோ அதிகம் புழங்காத அறையிலோ வைக்கலாம்.
தீவனம் மற்றும் தண்ணீரை அதற்கு உண்டான தட்டுகளில் கூண்டின் உள்ளேயே தரலாம். ஒவ்வொரு அறையிலும் 10 நாட்டுக் கோழிகள் வீதம் 40 கோழிகளை ஒன்றைரை கிலோ உடல் எடை அடையும் வரை வளர்க்கலாம்.
கூண்டின் கீழேயும் இதேபோல் கம்பி வலை அமைத்து 4 அறைகளாக பிரித்து ஒரு கூண்டை 2 அடுக்குகள் மற்றும் 8 அறைகள் கொண்ட கூண்டாக மாற்றினால் 80 கோழிகளை குஞ்சு பொரித்தது முதல் 5 மாதங்கள் வளர்க்கலாம். ஒரே கூண்டில் 2 முதல் 3 அடுக்குகள் வரை வைத்தால் லாபம் கூடுதலாக கிடைக்கும். சுகாதாரமான முறையில் தீவனம், தண்ணீர், சரியான சத்துக்களுடன் அடங்கிய அடர் தீவனம் கொடுத்தால் 3 மாதங்களில் அதிக உடல் எடை கிடைக்கும்.
குறிச்சொற்கள்: