குடம்புளி
குடம்புளி என்பது புளிப்புத் தன்மையுள்ள ஒரு பழம். இது இந்தோனே சியா வைத் தாயகமாகக் கொண்டது. இத்தாவரம் Guttiferae என்ற குடும்பத் தைச் சேர்ந்தது. இதை மலபார் புளி என்றும் அழைப்பர். இலங்கை யில் இதனை கொறுக்காய் புளி என்று அழைப்பர். சில நாடு களில் இது சமையலில் புளிக்கு மாற்றாக பயன் படுத்தப் படுகிறது. இது சமையலில் சுவைக் காகவும், செரி மாணத்திற்கும் பயன்படுகிறது.
இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து. மேற்கு மற்றும் நடு ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலை கேரளா தென்னிந்திய பகுதிகளிலும் நீலகிரி மலைகளிலும் விளைவிக்கப் படுகின்றன. இது இந்தியாவில் 2000 அடிகள் வரை உயரமுடைய கேரள மலைப் பகுதிகளில் வெகுவாகக் காணப்படுகிறது. இந்த பழங்களின் எடை 50 முதல் 150 கிராம் இருக்கும். இது ஆரஞ்சு பழம் போன்று காணப்படும். ஆனால் இதில் சுளைகள் சற்று அதிகமாக இருக்கும். இதன் காய் பச்சையாகவும், முற்றிய பிறகு மஞ்சள், ஆரஞ்சு நிற மாக மாறி பிறகு பழம் சிவப்பு நிறமாக மாறும்.
பிறகு நீண்ட நாட்கள் வெயிலில் உலர்தினால் கறுப்பு நிறமாக குடம்புளி கிடைக்கும். குடம்புளி டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதங்களில் அறுவடை செய்யலாம். இதில் ஆண், பெண் இரண்டு மரங்களும் பூக்களை உற்பத்தி செய்கிறது. இதில் இலைக் கணுக்களிலும், கிளை நுனியிலும் பூக்கள் தோன்றும். பொதுவாக ஆண்மரங்களில் ஒரு கொத்தில் 3 முதல் 5 பூக்களும், பெண் மரங்களில் ஒரு கொத்தில் 2 முதல் 3 பூக்களும் உற்பத்தியாகின்றன. ஆண் மலர்கள் நீளமாகவும், மெலிதாகவும் இருக்கும், ஆனால் பெண் மலர்கள் குட்டையாகவும், சற்று பருமணாகவும் இருக்கும்.
மரமானது பழுப்பு நிறமாகவும், நடுமரப்பகுதி கடின மாகவும் மரங்கள் காய்ப்பதற்கு 7 அல்லது 8 ஆண்டு கள் வரை ஆகும். அதனால் ஆண், பெண் மங்களை கண்டறிவது சற்று கடினம். தற்போது விதைகள் மூலமாகவும், ஒட்டு முறையிலும் குடம்புளி செடிகள் உருவாக்கப்படுகின்றன. இந்த மரத்தை எந்த நோய் களும், பூச்சிகளும் தாக்குவதில்லை. இது எத்த கைய தட்பவெப்ப நிலைகளிலும், எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது.
இந்த பழத்தோலிலிருந்து தயாரிக்கப்படும் சாறு ஹோமியோபதி மருத்துவத்தில் வாதம் மற்றும் வயிறு நோய்களுக்கு மருந்தாகவும், இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும், சர்க்கரை வியா தியை நிவத்த்தி செய்யவும், மரத்தின் பட்டைகளி னின்று பெறப்படும் மஞ்சள் நிற பசை உடல் தசைகள் வலு பெறவும், இதில் அடங்கியுள்ள ஹைட்டிராக்சி சிட்ரிக் அமிலம் இதயம் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கவும் பயன்படுகிறது. உலர்ந்த பழத்தின் சதை பகுதியை தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை துலக்குவதற்கும் பயன் படுத்தலாம். மேலும் ரப்பர் பாலை செட்டியாக்கு வதற்கும் குடம்புளி பயன்படுகிறது.
குறிச்சொற்கள்: