உழைப்பாளர்கள் தினம்
உழைப்பாளர்கள் தினம்
நாளுக்கு நாள் உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. புதிது புதிதாகத் தேவைகள் உருவாகிக் கொண்டே போகின்றன. புதிய சூழ்நிலைகளும் உருவாகின்றன. உங்கள் தொழிலைத் தீர்மானிக்கும் மனிதர்கள் மாறு கிறார்கள். நேற்று வெற்றியை ஏற்படுத்திய வழி முறைகள் இன்று அதே வெற்றியை ஏற்படுத்துவ தில்லை. இப்படி எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி கண்மூடித்தனமாக உழைத்து விட்டு உயர்வடைய வில்லை என்று வருத்தப்படுவதில் பயன் ஒன்றும் இல்லை.
செய்யும் செயல் நமது அறிவுக்கும் திறமைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். செய்யும் செயலில் ஈடுபாடும், முழு கவனமும் இருக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் நம்மிடம் குறை உள்ளது என்பது பொருள். என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம், கிடைக் கக்கூடிய பலன், அது உழைப்பிற்குப் போதுமானது தானா என்பதை எப்போதும் தெளிவாக அறிந் திருக்க வேண்டும். நாம் செயல் புரிகிற விதம் சரியானது தானா, மற்ற வர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்பதை அறிய வேண்டும். நம்மை விட அவர்கள் செயல் புரிகிற விதம் சிறந்ததாக. இருந்தால் அதைப் பின்பற்றத் தயங்கக்கூடாது. நம் தொழில் சம்பந்தமாக புதிதாக வரும் மாற்றங்களை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சரியாக பலன் தறாத தொழிலை விட்டுவிடத் தெரிய வேண்டும். அற்ப காரணங்களுக்காக அதைத் தொடர்ந்து செய்வது முட்டாள்தனம். புதியதை முயன்று பார்த்தால் ஒழிய நம் உள்ளே உள்ள திறமை களை நாம் அறிய முடியாது. இதை விட்டால் வேறு வழியில்லை, நமக்கு தெரிந்தது இவ்வளவுதான் என்று நெகட்டிவாக யோசிக்கக் கூடாது. இப்படி எல்லா அம்சங்களையும் மனதில் கொண்டு உழைத்தால் அந்த உழைப்பு உயர்வைத் தரும். கனவுகளுக்கும், சாதனைகளுக்கும் இடையே உள்ள ஒரே வித்யாசம் கடின உழைப்பு மட்டுமே.
உழைக்கும் மக்கள் வாழும் இடமே நாட்டின் மிகப்பெரிய மசூதி; மிகப்பெரிய தேவாலயம்; மிகப்பெரிய குருத்வாரா என்கிறார் நேரு. அது போல உலகை உருவாக்கிய உழைப்பாளி மக்களின் தலைவனான தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளுக்காக போராடிக் கைப்பற்றிய வெற்றித் திருநாள் “மே தினம்”. இத்திருநாளை வரவேற்று உழைக்கும் வர்க்கமான தொழிலாளர்களுக்கு உலக தொழிலாளர்கள் தினவாழ்த்துக்கள். இந்த தொழிலாளார் தினம் ஏற்பட்டதற்கு முதற் காரணம் வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைக்கப் பட்டதற்காக கிடைத்த வெற்றியே இந்த மே 1 தொழிலாளர் தினம்.
அனைத்து நாடுகளிலும் வேலை நேரத்தைக் குறைப்பதற்காக பல்வேறு வகையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் 1889 ஜூலை 14--ம் நாள் பாரிஸ் சோசலிசத் தொழிலாளார்களின் சர்வதேச தொழிலாளர் பாராளூ மன்றம் கூடியது. இதில் மொத்தம் 18 நாடுகள் கூடின.
400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். அதே போன்று பிரெட்டரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் காரல் மார்க்ஸ் வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் பிறகு 1890 மே 1ம் நாளன்று அனைத்துலக அளவில் தொழிலா ளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்று அங்கு அறைக்கூவல் விடப்பட்டது. இந்த அறைக் கூவலே மே முதல் நாளை சர்வதேச உழைப் பாளர்கள் (தொழிலாளர்கள்) தினமாக கொண்டாடிட வழி வகுத்தது.
அந்நாளை 1923 - ல் இந்தியாவில் மே தினமாக சென்னை மாநகரிலுள்ள உயர்நீதி மன்றம் அருகேயுள்ள கடற்கரையில் பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்த வாதியுமான ம. சிங்காரவேலர் அவர்களால் கொண்டாடப்பட்டது. இவ்வாறு போராடிக் கிடைத்த உழைப்பை உதிரமாக உள்வாங்கி வியர்வைச் சிந்திப் போராடி உழைக்கும் உழைப்பாளார்களுக்கு மீண்டும் இனிய உலக தொழிலாளர்தின நல்வாழ்த்துக்கள். ஆ. வீரத்திலகம்.
குறிச்சொற்கள்: