கறிவேப்பிலையை இப்படி குழம்பு வைச்சு சாப்பிட்டா முடி கருகருனு வளரும் எடையும் குறையுமாம்...ட்ரை பண்ணுங்க...!
கறிவேப்பிலையை இப்படி குழம்பு வைச்சு சாப்பிட்டா முடி கருகருனு வளரும் எடையும் குறையுமாம்...ட்ரை பண்ணுங்க...!
கடைகளில் சண்டை போட்டு வாங்குவதும், சாப்பிட அமர்ந்தவுடன் முதல் தனியாக எடுத்து வைப்பதும் கறிவேப்பிலையைத்தான். கறிவேப்பிலை அதன் வாசனைக்கும், தாளிப்பதற்கும் என்று மட்டுமே நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் கறிவேப்பிலையில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன.
துரதிர்ஷ்டவசமாக அது தெரிந்தாலும் நாம் அதை உட்கொள்ள விரும்புவதில்லை. இன்று இளைஞர்கள் இளம் வயதிலேயே வழுக்கை, இளநரை போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாக கறிவேப்பிலையை சாப்பிடாததும் ஒரு முக்கிய காரணமாகும்.
இதற்கு சிறந்த வழி கறிவேப்பிலையை சுவையான உணவாக சமைத்து சாப்பிடுவதுதான். சுவையான உணவுகள் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது செட்டிநாடு உணவுகள்தான். இந்த பதிவில் கறிவேப்பிலையை வைத்து சுவையான செட்டிநாடு கறிவேப்பிலை குழம்பு எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- கறிவேப்பிலை - 1/2 கப்
- சின்ன வெங்காயம் - 20
- பூண்டு -10 பல்
- தக்காளி - 1
- சாம்பார் பொடி - ஸ்பூன்
- மல்லி தூள் - 3 டீஸ்பூன்
- பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- புளி சாறு - 1 கப்
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- உளுந்து - 1 ஸ்பூன்
- மிளகு - 1/4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- வெல்லம் - 1 டீஸ்பூன்
- பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
- நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து அதிலிருந்து 1 கப் சாறை பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து மற்றும் வெந்தயத்தை சேர்க்கவும்.
- கடுகு வதங்கியதும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- கறிவேப்பிலை, தக்காளி, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், கொத்தமல்லி தூள் ஆகியவற்றை நன்றாக விழுதாக அரைக்கவும். தேவைப்பட்டால் இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டு வதங்கியதும் அரைத்த விழுதை இதனுடன் சேர்க்கவும்.
- இதை நன்கு கலந்து 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை குறைந்த தீயில் கொதிக்க வைக்கவும். பச்சை வாசனை போகும் வரை சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இடையிடையே கிளறி விடவும்.
- இப்போது புளித்தண்ணீர், மஞ்சள்தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
- குழம்பு பதம் வரும் வரை மிதமான தீயில் எண்ணெய் மேலே மிதக்கும் வரை கொதிக்க விடவும். குழம்பை அடுப்பிலிருந்து இறக்கி வைக்குமுன் வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது அடுப்பை அணைத்தால் சூப்பரான கறிவேப்பில்லை குழம்பு ரெடி!
குறிச்சொற்கள்: