திராட்சை தோசை
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி : 500 கிராம்
தோசை மாவு : அரை கப்
கறுப்பு திராட்சை பழம் : 100 கிராம்
உளுந்தம் பருப்பு : 100
எண்ணெய் : 100 மி.லி
உப்பு : தேவையான அளவு
செய்முறை
- இட்லி அரிசி, உளுந்தைத் தனிதனியே ஊறவைத்து அரைத்து. உப்புச் சேர்த்து கலந்து, திராட்சையையும் அரைத்து, தோசை மாவையும் இதனுடன் கலந்து வைக்கவும்.
- பின் தோசை தவாவில் தோசையாக ஊற்றி, இருபுறமும் சிறிது எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.
- தோசை பிடிக்காத குழந்தைகள் இருக்க மாட்டார்கள். தோசைமாவுடன் மாதுளை ஜூஸ், ஆப்பிள் ஜூஸ், கலந்து தோசை வார்த்துக் கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
பலன்கள்
கறுப்புத் திராட்சையில் வைட்டமின் சி, தாது உப்புக்கள் உள்ளன. திராட்சையை விதையுடன் சேர்ப்பதால், கொலஸ்ட்ராலைக் குறைக்கும். புதினா, தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.
குறிச்சொற்கள்: