கண் அழுத்த நோய் (Glaucoma)
கண் அழுத்த நோய் (Glaucoma)
கண் அழுத்த நோய் (Glaucoma) என்பது கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்சினைகளின் தொகுப்பு. உலக அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், க்ளாக்கோமா இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை எல்லோரையும் பாதிக்கிற பிரச்சினை பார்வை நரம்பு சேதமாவதால் பார்வை இழப்பு நிலைக்கு விரைந்து முன்னேறுவதும், பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு செல்ல முடியாததுமான ஒரு கண் நோய் ஆகும். பல நேரங்களில் கண்ணில் உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதனாலேயே, இது விளைகிறது. ஆனால் வேறு பல காரணங்களினாலும் இந்நோய் கண்களில் உருவாகிறது.
இது தனக்கே உரித்தான ஒரு குறிப்பிட்ட முறையில் விழித்திரையின் நரம்பு முடிச்சு அணுக்கள் இழப்பை ஈடுபடுத்துகிறது. கண்ணழுத்த நோயில் பல துணை வகைகள் உள்ளன. ஆனால் அவை யாவும் பார்வை நரம்பு இயக்கத்தடை என்பதன் வகைகளாகவே கருதலாம். ரத்த அழுத்தம் போலவே கண்களுக்கும் ஒரு வித அழுத்தம் உண்டு. அது அதிகமாவதால் உண்டாகிற பிரச்சினை இது.
ஆண்களைவிட, பெண்களை அதிகம் பாதிக்கிற பிரச்சினை. இந்தப் பிரச்சினையில் இரண்டு வகைகள் உண்டு. கண்ணின் திரவம் வெளியே போகிற வழியில் அடைப்பிருந்தால் விளக்கொளியைப் பார்க்கிற போது சுற்றி கலர் கலராக வானவில் மாதிரித் தெரியும். தலைவலி, கண்களில்வலி, சிவந்த கண்கள், குமட்டல் பக்கவாட்டுப் பார்வை பாதிப்பு படிப்படியான பார்வை இழப்பு போன்றவை இதன் அறிகுறிகள். மாலை நேரத்தில் இவை தீவிரமாகலாம்.
கண்ணின் திரவம் வெளியே போகிற வழியில் அடைப்பில்லாவிட்டால் அதற்கான அறிகுறிகள் பெரிதாக வெளியே தெரியாமலிருக்கலாம். மருத்துவரால் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். எனவே தான் கண் அழுத்தம் அதிகமாகி கண்களில் பிரச்சினை வரும் போது எப்போதுமே கண் மருத்துவரைப் பார்க்க வேண்டும். ஆரம்பக் கட்டத்திலேயே இந்த நிலையைக் கண்டறிந்து விட்டால் பிறகு அது மேலும் முன்னேறிச் செல்வதைத் தடுக்க இயலும் அல்லது மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைமைகள் மூலம் அதன் முன்னேற்றத்தை மட்டுப்படுத்த இயலும்.
குறிச்சொற்கள்: